Our Feeds


Wednesday, March 9, 2022

ShortTalk

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட மனிதர் 2 மாதங்களுக்குப் பின் மரணம்.



பன்றியின் மரபணு மாற்றப்பட்ட இதயத்தை, பொருத்தி இருந்த மனிதர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.


அமெரிக்காவின் மேரிலாந்து நகரைச் சேர்ந்த டேவிட் பென்னட்க்கு(57) இதயம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இதயம் தொடர்ந்து செயலிழந்து வந்தது, வேறு இதயம் மாற்றாவிட்டால் பென்னட் மரணமடைவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.


பென்னடுக்கு மாற்று இதயம் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. சீக்கிரமாக வேறு இதயம் பொருத்தவேண்டும். மருத்துவர்கள் ஒரு நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியாக‌ விஞ்ஞானத்தைக் கையில் எடுத்தனர். விலங்கின் இதயத்தைப் பொருத்த ஒருவழியாக முடிவு செய்யப்பட்டது. பலகட்ட முடிவுகளுக்குப் பிறகு, மரபணி மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்த மேரிலாந்து மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் முடிவு செய்தனர்.


பன்றியின் இதயத்தை மனிதருக்கு மாற்றுவதற்கான அமெரிக்க சுகாதாரத்துறையின் ஒப்புதலையும் மேரிலாந்து மருத்துவர்கள் பெற்றனர். இதையடுத்து மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் பன்றியின் மரபணு மாற்றம் செய்யப்பட்டது. இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் பன்றியின் இதயம் பென்னடுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.


டேவிட் பென்னடை காப்பாற்ற வேண்டும் என்றே பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது. இது சோதனை முயற்சி என்று டேவிட் பென்னட் குடும்பத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் இதயம் எப்படி வேலை செய்யும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை அவர்கள் குடும்பத்தினர் அறிந்திருந்தனர். பன்றியின் இதயம் மரபணு மாற்றபட்டு மனிதருக்கு பொருத்தப்பட்டிருப்பது மருத்துவ உலகில் இதுவே முதல்முறை.


கடைசி முடிவு


”இது ஒரு குருட்டுத்தனமான முடிவு. ஒன்று அறுவை சிகிச்சை தோல்வியடைந்து நான் இறக்க வேண்டும்,அல்லது சிகிச்சை வெற்றி பெற்று நான் நலமுடன் வாழ வேண்டும். இதுவே என் கடைசி முடிவாக இருக்கும்” என அறுவை சிகிச்சைக்கு முன் டேவிட் தெரிவித்திருந்தார். பென்னட் மற்றும் அவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் இந்த அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது.


மாற்று முடிவுகள்


உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக, பிறரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட மனித உறுப்புகளில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. அதற்கு பதிலாக விலங்குகளின் உறுப்புகளை பயன்படுத்தலாமா என விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். விலங்கின் உறுப்புகள் மனிதர்களுக்கு மாற்றப்பட்டால் மருத்துவ உலகில் மிகப்பெரிய விஷ்யமாக இருக்கும் என பல விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


மேரிலாந்து மருத்துவர்கள்


இதற்கு முன் பல முறை விலங்கின் உறுப்புகள் மனிதனிக்கு பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அது அத்தனையும் தோல்வியில் முடிந்திருக்கிறது. இதனால் இத்திட்டம் தோல்வியடைந்ததாகவே இருந்தது. இந்த நிலையில், மேரிலாந்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் பன்றியின் இதயத்தைப் பயன்படுத்தி மரபணு திருத்தம் செய்து அதன் உயிரணுக்களில் உள்ள சர்க்கரையை அகற்றினர், அதன்பிறகு பன்றியின் இதயம் மனிதருக்கு மாற்றப்பட்டது. பன்றியின் இதயம் மாற்றப்பட்டவர் நன்றாக இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.


மரணம்


மேரிலாந்து மருத்துவ ஆராய்ச்சி குழு பன்றியின் மரபணு மாற்றப்பட்ட இதயத்தை மனிதனுக்கு வைத்து அறுவை சிகிச்சை செய்தது. தற்போது பன்றியின் இதயத்தை பெற்றுக்கொண்டவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இரண்டு மாதம் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார் பென்னட். துரதிருஷ்டவசமாக இன்று பென்னட் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சையின் விளைவுகள் குறித்து பென்னடுக்கு ஏற்கெனவே தெரியப்படுத்தி, அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஒப்புதலோடு தான் இந்த அறுவை சிகிச்சை நடந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »