Our Feeds


Wednesday, March 16, 2022

ShortNews

PHOTOS: சிறப்பாக நடைபெற்று முடிந்த பிறைநிலா ஊடக வலையமைப்பு நடாத்திய செய்தி வாசித்தல் பயிற்சிப் பட்டறை



ஊடகத்துறையில் ஆர்வமுள்ள இளம் ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கான செய்தி முறைமை சம்பந்தமான செயற்பாடுகளை பயிற்சிப் பட்டறையாக பிறைநிலா ஊடக வலையமைப்பு கடந்த பல வருடங்களாக முன்னெடுத்து வருகின்றது.


அதனடிப்படையில் குழு 06 ற்கான செய்தி வாசித்தல் பயிற்சிப் பட்டறை கடந்த வாரம் இரண்டு நாட்கள் வதிவிட பயிற்சிப் பட்டறையாக நடந்து முடிந்தது.


சுமார் 16 வருடங்களுக்கு மேல் ஊடகத்துறையில் அனுபவமுள்ள பிறைநிலா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் சப்ராஸ் அபூபக்கர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் செய்திப்பிரிவு பிரதிப் பணிப்பாளர் ஜுனைத் எம். ஹாரிஸ் ஆகியோர்கள் வளவாளர்களாக கலந்து பயிற்சிகளை வழங்கி இருந்தனர்.


குருநாகல் மாவட்டம், நாரம்மல பிரதேசத்தில் நடந்த இந்தப் பயிற்சிப் பட்டறையில் நாடு பூராகவும் இருந்து சுமார் 30 ற்கும் மேற்பட்ட தமிழ்,  முஸ்லிம் ஊடக ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











Subscribe to this Blog via Email :
Previous
Next Post »