பிரதமர் ரணில் – சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் தொலைபேசி உரையாடல்.
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான தொலைப்பேசி ஊடாக உரையாடலொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை எதிர்க்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை வெற்றிக்கொள்ள தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக இதன்போது பிரதமருக்கு சமந்தா பவர் உறுதியளித்துள்ளார்.
இலங்கை மக்களின் நம்பிக்கையை மீளப்பெறுவதற்காக அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் சமந்தா பவர் வலியுறுத்தினார் என சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகத்தின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான தருதணத்தில் இலங்கைக்கு உதவுவதில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஜி7 அமைப்பு உள்ளிட்ட உதவி வழங்குநர்களுடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகம் நெருக்கமாக இணைந்து செயற்படும் எனவும் சமந்தா பவர் உறுதியளித்துள்ளார்.
