சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஜே.கொடித்துவக்கு மருத்துவ சேவைகள், நலன்புரி மற்றும் களப்படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட உதவிப் பரிசோதகர் பதவியிலிருந்து சீதாவகபுர பிரதேச அதிகாரி பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதம பொலிஸ் பரிசோதகர் பி.ஏ.டி.எஸ். அத்தரகம, சாதாரண கடமைகளுக்காக கல்கிஸை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
