Our Feeds


Thursday, June 16, 2022

SHAHNI RAMEES

கொழும்பின் சில பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு...!

 

கொழும்பின் சில பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை (18) இரவு 11 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை 3 மணிவரை இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

இக்காலப்பகுதியில் கொழும்பு 5, 6 மற்றும் 11 ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »