Our Feeds


Thursday, June 16, 2022

SHAHNI RAMEES

மீண்டும் எப்போது எரிபொருள் கிடைக்குமென்பதை தற்போது கூற முடியாது.

 

இதுவரை எரிபொருள் நிறுவனங்களுக்கு 735 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தவேண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவம் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, மீண்டும் நாட்டுக்கு எரிபொருள் கிடைக்கும் திகதி தொடர்பில் தற்போது சரியாக குறிப்பிட முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »