Our Feeds


Sunday, June 5, 2022

SHAHNI RAMEES

3ஆவது போட்டியிலும் மே.இ.தீவுகள் அணிக்கு வெற்றி


 நெதர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து, 309 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 288 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் இந்த வெற்றியின் ஊடாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »