Our Feeds


Sunday, June 5, 2022

SHAHNI RAMEES

கிழக்கில் இளைஞர்கள் மத்தியில் சடுதியாக அதிகரிக்கும் தொற்றா நோய்கள்!


 சமீபத்திய புள்ளிவிபரங்களின் படி, கிழக்கு மாகாணத்தில் புற்றுநோய் மற்றும் சர்க்கரை வியாதி போன்ற தொற்றா நோய்கள் இளவயதினர் மத்தியில் அதிகரித்து வருவதாகவும், எனவே வைத்திய நிபுணர்களும், பல்கலைக்கழக வைத்திய பீட கல்வியியலாளர்களும் இது குறித்து கூடுதலான கவனம் செலுத்தவேண்டும் என கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பிரிவுகளில் ஒன்றான சமூகம் மற்றும் தொழிற்துறைகளைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் நிலையம் துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழகச் சுகாதார பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் கடந்த புதன்கிழமை (01) மாலை இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »