(நா.தனுஜா)
இலங்கையில் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்கள் குறித்து மிகுந்த கவலையடைவதாகவும், அதனுடன் தொடர்புடையவர்கள் பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது கூட்டத்தொடரின்போது சுட்டிக்காட்டியிருக்கும் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி என்பவற்றை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியத்தை மீள வலியுறுத்தியுள்ளன.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் தற்போது நடைபெற்றுவரும் 50 ஆவது கூட்டத் தொடரில் நேற்று (14) செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோதே மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டார்.
