மே 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின்போது தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (15) கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் குமார வெல்கமவும் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனும் கலந்து கொண்டார்.
