Our Feeds


Thursday, June 16, 2022

ShortNews

PHOTOS: நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்துக்குச் செல்லும் வீதியில் கைக்குண்டு மீட்பு!

 


(நீர்கொழும்பு நிருபர் எம். இஸட் ஷாஜஹான்)


நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்துக்குச் செல்லும் வீதியோரத்தில் கைக்குண்டு ஒன்றை இன்று (16) பகல் மீட்டுள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவின்படி அந்த குண்டை விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் செயலிழக்கச் செய்துள்ளனர்.

பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், பிராந்திய குற்ற புலனாய்வு பிரிவினர் ஆகியோர் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எந்த நோக்கத்துக்காக இங்கு இந்த கைக்குண்டு வைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக இதுவரை தெரிய வரவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »