Our Feeds


Tuesday, June 7, 2022

SHAHNI RAMEES

திடீரென ரஷ்ய அதிபர் புடினுக்கு கடிதம் அனுப்பினார் மைத்திரி! காரணம் என்ன?

 

ரஷ்ய விமானத்திற்கு கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.


குறித்த சம்பவமானது நமது இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையிலான நம்பிக்கையையும் பரஸ்பர மரியாதையையும் ஓரளவுக்கு குலைத்துள்ளது என்று அவர் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த தடை உத்தரவானது,ஈஸ்டர் தாக்குதல்கள் மற்றும் கோவிட்-19 ஆகியவற்றிலிருந்து மீண்டு வரும் சுற்றுலாத்துறைக்கு பேரழிவு தரும் அடியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனது நாடும், மக்களும் சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நாங்கள் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு மற்றும் உணவு நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறோம்.

எனவே, எங்கள் நம்பிக்கைக்குரிய நண்பர்களின் உதவியும் ஆதரவும் எங்களுக்குத் தேவைப்படும். நமது பழமையான மற்றும் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ரஷ்யாவின் உதவி எங்களுக்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »