Our Feeds


Tuesday, June 14, 2022

SHAHNI RAMEES

பால் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து


 அமெரிக்க விவசாய திணைக்களத்தின் “முன்னேற்றத்திற்கான உணவு” முயற்சியில் பங்குபெறும் இலங்கைப் பால் பண்ணையாளர்களின் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அல்லது 27 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டத்தில் இலங்கையின் விவசாயத் திணைக்களம் கைச்சாத்திட்டுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கலந்துகொண்டார். இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய பங்காளித்துவத்துடன், இந்த திட்டம் 2017 இன் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.

ஏற்கனவே 25,000 இலங்கை பால் பண்ணையாளர்கள் பயனடைந்துள்ளதுடன், அவர்களின் பால் உற்பத்தி இன்றுவரை சராசரியாக 68 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, 80,000 இலங்கையர்கள் இந்த திட்டத்தின் மூலம் இறுதியில் உதவிகளைப் பெறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று உட்பட எதிர்பாராத தாமதங்களுக்குப் பிறகு, அமெரிக்க தூதரகம் மற்றும் இலங்கை விவசாயத் திணைக்களம் இந்த கூட்டு ஒப்பந்தத்தை இன்று இறுதி செய்தன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »