Our Feeds


Friday, June 3, 2022

ShortTalk

வில்பத்துவில் மரங்களை நடுமாறு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான றிசாட் பதியுதீனின் மேன்முறையீடு: மனுவை பரிசீலனைக்கு எடுக்க திகதி நிர்ணயம்



வில்பத்து – கல்லாறு பிரதேசத்தில் காடழிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் மரங்களை நாட்டு வளர்க்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக நாடாளுமன்ற உறப்பினர் றிஷாட் பதியுதீன் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனைக்கு இன்று (03) திகதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.


தமக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என அவர் இந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.


குறித்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


வில்பத்து கல்லாறு சரணாலயத்தில் காடுகள் அழிக்கப்பட்ட நிலையில், அங்கு மீண்டும் மரங்களை நட்டு பராமரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அண்மையில் முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »