Our Feeds


Sunday, June 5, 2022

SHAHNI RAMEES

லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு?



 உள்நாட்டு லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 6,850 ரூபாவாகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 2,740 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லாஃப் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், லாஃப் எரிவாயுவின் விலை அதிகரிக்கலாம் என்ற தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில், தாம் இன்னும் அந்த முடிவை எடுக்கவில்லை என்று லாஃப் நேற்று (04) அறிவித்தது.

எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு லாஃப் எரிவாயு விநியோகத்தை இன்று ஆரம்பிக்கவுள்ளதாக லாஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வாடிக்கையாளர்களை தங்கள் விற்பனை நிலையங்களுக்கு எரிவாயு விநியோகிக்கும் வரை வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்றும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »