Our Feeds


Friday, June 3, 2022

SHAHNI RAMEES

பிரகீத் எக்னெலிகொட விவகாரம்: பிரதிவாதிகளான இராணுவ புலனாய்வாளர்களின் பிணை இரத்து!



ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச்

சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பிலான வழக்கின் பிரதிவாதிகளான  9 இராணுவ புலனாய்வாளர்களின்  பிணையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.


அதன்படி, அவர்கள் ஒன்பது  பேரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற அமர்வு இன்று ( 3) உத்தரவிட்டது.


பிரதிவாதிகள் சாட்சியாளர்களை அச்சுறுத்துவதாக அல்லது அவர்களுக்கு அழுத்தம் பிரயோகிப்பதாக ஏற்பட்ட நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் இதற்கான உத்தரவை விசேட மேல் நீதிமன்ற அமர்வு  பிறப்பித்தது.


அதன்படி, எக்னெலிகொட விவகாரத்தின் பிரதிவாதிகளான கிரித்தலை இராணுவ புலனாய்  முகாமின் கட்டளைத் தளபதியாக இருந்த  லெப்டினன்ட் கேர்ணல் சம்மி அர்ஜுன குமாரரத்ன, ஸ்டாப் சார்ஜன்ட் வடுகெதர வினிபிரியந்த டிலஞ்சன் உபசேனா எனபப்டும் சுரேஷ், ஸ்டாப் சார்ஜன்ட் ஆர்.எம்.பி.கே. ராஜபக்ஷ எனும் நாதன்,  ஸ்டாப் சார்ஜன்ட் செனவிரத்ன முதியன்சலாகே ரவீந்ர ரூபசேன எனபப்டும் ரஞ்சி, சமிந்த குமார அபேரத்ன,  எஸ்.எம். கனிஷ்க குமார அபேரத்ன, ஐய்யா சாமி பாலசுப்ரமணியம், கி.ஜி. தரங்க பிரசாத் கமகே, எரந்த பீரிஸ்  ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »