Our Feeds


Wednesday, July 13, 2022

SHAHNI RAMEES

நாட்டை விட்டுச் செல்வதற்காக 53 லட்சம் ரூபா செலுத்திய பசில்: பயண விவரங்களும் அம்பலம்...!




முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்

ஷ – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்ததை அடுத்து, அவர் உடனடியாக விமானப் பயணச்சீட்டு கொள்வனவு செய்தமை தொடர்பான பல விபரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.


எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் தகவலின்படி, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து வொஷிங்டன் செல்வதற்காக அவருக்கு முதல் வகுப்பு ‘கோல்ட்’ உறுப்பினர் நிலை சீட்டு வழங்கப்பட்டது.


EK-649 விமானத்துக்கான முன்பதிவு குறிப்பு எண் PCR652 இன் கீழ், 176 2349819160 எனும் இலக்கத்தையுடைய பயணச் சீட்டு, 11 ஜூலை 2022 அன்று வழங்கப்பட்டது.


பயணச் சீட்டு விவரங்களின்படி, கொழும்பில் இருந்து துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு அவர் முதலாவதாக செல்லவிருந்தார். நேற்றிரவு 12.15 மணிக்கு விமான நிலையத்துக்குள் நுழைந்து, அதிகாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் காலை 6.00 மணிக்குத் துபாய் சென்றடையவிருந்தார்.


இரண்டாவது விமானம் துபாயில் இருந்து நேற்று மதியம் 02.25 மணிக்கு புறப்பட்டு இன்று காலை 8.45 மணிக்கு வொஷிங்டனில் உள்ள டல்லஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.


இதேவேளை அதே விமான நிறுவனத்தில் மார்ச் 02, 2023 அன்று வொஷிங்டனில் இருந்து கொழும்பை அடைய மற்றொரு பயணச் சீட்டு பதிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இதற்காக மொத்தம் 05.3 மில்லியன் ரூபா ரொக்கமாகச் செலுத்தப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »