துபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சந்தேகத்துக்கிடமான 5 கொள்கலன்கள் வத்தளை பகுதியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த கொள்கலன்களில் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானம் மற்றும் சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் என்பன காணப்பட்டன.
இவை அனைத்தையும் இலங்கை சுங்க அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர்.