மலைவாஞ்சன்
ஹட்டன் பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றவர்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளனர்.
ஒரு சிலர் தங்களுக்கு நெருக்கியவர்களை வரிசையின் இடையில் புகுத்துவதற்கு முற்பட்டதன் காரணமாகவும்,ஒரு சிலர் வரிசையில் வராது பெற்றோல் பெற்றுக்கொள்ள முற்பட்டதன் காரணமாகவும் இந்த முறுகல் நிலை ஏற்பட்டது.
ஹட்டன் நகரிலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு, ஒரு வாரத்துக்குப் பின்னர். இன்று (04) அதிகாலை இரண்டு மணியளவில் பெட்ரோல் பௌசர் வந்தது. அதிலிருந்து இறக்கப்பட்ட எரிபொருளே, விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
