நாடு எதிர்நோக்கியிருக்கும் எரிபொருளின்மை,
எரிவாயு தட்டுப்பாடு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தன்னிடம் தீர்வு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டில் நிலவும் இச்சிக்கல் நிலைமைகளுக்கு மூன்று மாதங்களுக்குள் இலகுவாக தீர்வு காண முடியும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
