Our Feeds


Saturday, July 2, 2022

ShortNews

பாராளுமன்றத்துக்கு தீ வைத்த லிபிய மக்கள் - நடந்தது என்ன?



லிபியாவின் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுவரும் மக்கள், டோப்ரூப் நகரிலுள்ள அந்நாட்டின் பாராளுமன்றத்துக்கு தீ வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தொடரும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு எதிராக பெரும்பாலான லிபிய நகரங்களில் பேரணிகள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

2011 ஆம் ஆண்டு நேட்டோ ஆதரவு கிளர்ச்சியால் லிபியாவில் நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த கேணல் முயம்மர் கடாபியை பதவி நீக்கம் செய்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

தலைநகர் திரிபோலியில், போட்டி நிர்வாகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், போராட்டக்காரர்கள் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அவர்களின் கோரிக்கைக்கு இடைக்கால கூட்டு அரசாங்கத்தின் தலைவரான அப்துல் ஹமீத் டிபீபா ஆதரவு அளித்துள்ளார்.

இந்நிலையில், தேர்தலை நடத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையால் ஜெனீவாவில் நடத்தப்பட்ட  பேச்சுவார்த்தைகள் சிறிய முன்னேற்றத்துடன் முடிவடைந்த அடுத்த நாளே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »