மின்சார உற்பத்திக்காக LIOC நிறுவனத்திடம் 7000 மெட்ரிக் தொன் டீசலை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
LIOC நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தாவுடன் இது தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
