Our Feeds


Thursday, August 4, 2022

ShortTalk

தேசபந்து தொடர்பான ஆலோசனைகளை அமுல் செய்யாமை : உடனடியாக தலையீடு செய்ய சட்ட மா அதிபருக்கு உத்தரவு




(எம்.எப்.எம்.பஸீர்)


மைனா கோ கம, கோட்டா கோ கம மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளில், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் முன்னெடுக்க, சட்ட மா அதிபர் வழங்கிய ஆலோசனைகள் பொலிஸ் மா அதிபரால் பின்பற்றப்படாமை தொடர்பில்  கண்டிப்பான நடவடிக்கை முன்னெடுக்கப்படல் வேண்டும் என கோட்டை நீதிவான் திலின கமகே இன்று (3) திறந்த மன்றில் அறிவித்தார்.


மைனா கோ கம,கோட்டா கோ கம மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பிலான  வழக்கு விசாரணைகள் இன்று கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது.

 இதன்போதே நீதிவான் இதனை தெரிவித்தார்.

 இன்றைய தினம் வழக்கு விசாரணைகளின் போது,  பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குனரத்ன,  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  தேசபந்து தென்னகோனுக்கு எதிராக சி.ஐ.டி.யினர் நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் கவலை வெளியிடப்பட்டதுடன், நாட்டில்  சட்ட ஆட்சி கெள்விக்குரியாக்கப்ப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்ப்ட்டது.

இதனையடுத்து, சட்ட மா அதிபர் சார்பில் முன் வைக்கப்ப்ட்ட விடயங்களையும் ஆராய்ந்த பின்னர் நீதிவான் திலின கமகே, இரு வேறு உத்தரவுகளை சட்ட மா அதிபருக்கு பிறப்பித்தார்.

 தேசபந்து தென்னகோன் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் 3 தடைவைகள் சட்ட மா அதிபர் ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும், அவை  செயற்படுத்தப்படாமையை எந்த வகையிலும் ஏற்க முடியாது என தெரிவித்த நீதிவான், அவ்வாறு சட்ட மா அதிபரின் ஆலோசனையை செயற்படுத்தாமை தொடர்பில் முன்னெடுக்க முடியுமான நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றுக்கு அடுத்த தவணையின் போது அறிவிக்குமாறு  நீதிவான் உத்தரவிட்டார்.

 அத்துடன் குறித்த ஆலோசனைகளை அமுல் செய்ய, சட்ட மா அதிபர் உடனடியாக தலையீடு செய்யுமாறும் நீதிவான் மர்றொரு உத்தரவையும் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »