பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் தாம் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.
ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டமானது, மனித உரிமைகளுக்கு முரணாக உள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
