அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சுயாதீன கட்சிகளின் ஒன்றியத்தினால், ‘மேலவை இலங்கை கூட்டணி’ என்ற புதிய கூட்டணி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் தற்சமயம் இடம்பெறுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையில் இந்தக் கூட்டணி உருவாகியுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, இலங்கை கமியூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை சமசமாஜ கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.
