Our Feeds


Friday, October 14, 2022

ShortTalk

பொருளாதார நெருக்கடி : பிரித்தானிய நிதியமைச்சர் பதவியிலிருந்து க்வாசி க்வார்டேங் நீக்கம்



பிரித்தானிய நிதியமைச்சர் பதவியிலிருந்து க்வாசி க்வார்டேங் நீக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் லிஸ் ட்ரஸ் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் நிதி அமைச்சராக க்வாசி க்வார்டேங் பதவி வகித்தார்.

அவர் முன்வைத்த வரி குறைப்புத் திட்டங்களையடுத்து. பிரிட்டனில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில் பிரதமர் லிஸ் ட்ரஸினால்  நிதியமைச்சர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டுள்ளதாக க்வாசி க்வார்டேங் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த செப்டெம்பர் 6 ஆம் திகதி நிதியமைச்சராக க்வாசி க்வார்டேங் நியமிக்கப்பட்டார்.

பிரிட்டனில் 2 ஆவது மிகக் குறுகிய காலம் நிதியமைச்சராக பதவி வகித்தவர் க்வாசி க்வார்டேங் ஆவார்.

அவரைவிட மிகக் குறுகிய காலம் பிரித்தானிய நிதியமைச்சராக பதவி வகித்த ஒரேயொருவர் லெய்ன் மெக்லியோட் ஆவார். 1970 ஜுன் மாதம் நிதியமைச்சராக பதவியேற்ற மெக்லியோட் ஒரு மாத்தின் பின்னர் காலமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »