Our Feeds


Friday, October 14, 2022

ShortTalk

கப்பம் கோரி கடத்தப்பட்ட கள்எலிய வர்த்தகர் பொலிஸாரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்!



வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று மிரட்டி கப்பம் பெற முயற்சித்த குழுவினரை பல்லேவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.


நேற்று முன்தினம் (12) கள்எலிய பிரதேசத்தில் உள்ள வர்தக நிலையம் ஒன்றுக்கு காரில் வந்த சில நபர்களால் வர்த்தகர் கடத்தப்பட்டதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தல் இடம்பெற்று சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் குறித்த குழுவினர் வர்த்தகரின் மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 120,000 ரூபாவை செலுத்தினால் கணவர் விடுவிக்கப்படுவார் என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வர்த்தகரின் மனைவி பல்லேவெல பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, கப்பம் செலுத்தியவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்தனர்.

இந்நிலையில் பொலிஸாரின் அறிவுறுத்தலின்படி கப்பம் கேட்ட நபர்கள் கோரிய பணத்தை வழங்க மனைவி சம்மதித்துள்ளதுடன், பணத்தை செலுத்த கடவத்தை நகருக்கு வருமாறு தொழிலதிபரின் மனைவிக்கு கப்பம் கோருபவர்கள் தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளனர்.

அதன்படி செயற்பட்ட பல்லேவெல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்திக்க சஞ்சீவ மற்றும் அதிகாரிகள் குழுவினர் வர்த்தகரின் மனைவியுடன் கப்பம் கோருபவர்கள் கூறிய இடத்துக்குச் சென்றனர்.

இந்நிலையில் கறுப்பு நிற காரில் சந்தேக நபர்கள் குறித்த இடத்துக்கு வந்துள்ளனர். இதன்போது, கடத்தப்பட்டவரிடம் மனைவி அவர்களிடம் பணத்தை வழங்க முயற்சித்தபோது பொலிஸாரால் சந்தேக நபர்கள் கைத செய்யப்பட்டதுடன் கடத்தப்பட்ட வர்த்தகரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »