Our Feeds


Wednesday, October 5, 2022

ShortTalk

சமையல் எரிவாயு விலை குறைப்பு- லிட்ரோ அறிவிப்பு.

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் சற்றுமுன் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோகிராம் சிலிண்டர் 271 ரூபாவாலும், 5 கிலோகிராம் சிலிண்டர் 107 ரூபாவாலும், 2.3 கிலோகிராம் சிலிண்டர் 48 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »