இரட்டைக் பிரஜாவுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகள் இன்று (ஒக்.31) நிறைவடையவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரட்டைக் பிரஜாவுரிமையைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டறிய விசேட விசாரணை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களின் பிறந்த திகதி மற்றும் தேசிய அடையாளஅட்டை இலக்கங்களை கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் குடிவரவு குடியகல்வு திணைக்களம் கோரியிருந்தது.
அதன்பிறகு, குடிவரவுத் திணைக்களம் உரிய பட்டியல்களைச் சரிபார்க்க ஆரம்பித்துள்ளது.
எவ்வாறாயினும், இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இரட்டைக் பிரஜாவுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று இறுதித் தீர்மானத்தை வழங்க முடியும் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
