Our Feeds


Wednesday, November 16, 2022

ShortTalk

எலான் மஸ்க்கின் அலப்பறை மீண்டும் ஆரம்பம் - மாற்றங்களுடன் அமுலுக்கு வருகிறது ட்விட்டரின் புளூ டிக் கட்டண சேவை.



ட்விட்டரின் புளூ டிக் கட்டண சேவை கடந்த வாரம் தற்காலிக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில். அடுத்த வார இறுதிக்குள் இந்த சேவையை மீண்டும் கொண்டு வரவுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.


ட்விட்டரை பயன்படுத்துவோருக்கான சிறப்பம்சங்களில் ஒன்றாக, தங்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு என உறுதிப்படுத்திக் கொள்ள, ட்விட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும்.

இந்த புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் 19.99 அமெரிக்க டொலர்கள் கட்டணம் வசூலிக்க ட்விட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என முதலில் ஒரு தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் வர்த்தக யுக்தியாக, டுவிட்டர் புளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டொலர் (660 இந்திய ரூபா) என விலை குறைப்பு செய்து எலான் மஸ்க் அறிவித்தார்.

கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவு செய்யலாம் என்ற சலுகைகளும் அறிவிக்கப்பட்டன.

இந்த சேவையானது இந்தியாவில் பெற மாதம் ரூ. 719(இந்திய ரூபா) செலவாகும் என்றும் இது துல்லியமாக இருந்தால், முதலில் ஐபோன் பயனர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ட்விட்டர் புளூ டிக் சேவையை பணம் கொடுத்து பெறும் யாராவது இதனை தவறாக பயன்படுத்தினால், அவர்கள் தங்களின் கட்டண தொகையை இழக்க நேரிடும் என்றும் அவர்களின் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் எலான் மஸ்க் கூறினார்.

இந்த நிலையில், புளூ டிக் கட்டண சேவை கடந்த வாரம் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டது. அடுத்த வார இறுதிக்குள் இந்த சேவையை மீண்டும் கொண்டு வருவேன் என எலான் மஸ்க் கூறினார்.

ஒரு சில மாதங்களில் கட்டணம் செலுத்தாத அனைத்து புளூ டிக் குறியீடுகளும் நீக்கப்படும் என தெரிவித்தார். இதற்கு என்ன பொருள் எனில், இதற்கு முன்பு புளூ டிக் வசதி பெற்றவர்கள், அதனை தொடர்ந்து நீடிக்க செய்ய அதற்கான கட்டணம் செலுத்த வேண்டும்.

புது அறிவிப்பின் இடையே, யாரேனும் தங்களது ட்விட்டரின் அதிகாரப்பூர்வ பெயரை மாற்ற முற்பட்டால், அது புளூ டிக் குறியீடு இழப்புக்கு வழிவகுக்கும். அந்த பெயரை ட்விட்டர் நிறுவனம், சேவை விதிகளுக்கு உட்பட்டு உறுதி செய்யும் வரை பெயரை பெற முடியாமல் இழக்க நேரிடும் என்றும் மஸ்க் கூறியுள்ளார்.

புளூ டிக் கட்டண சேவை அறிவிப்பை மஸ்க் வெளியிட்ட பின்னர், 2 நாட்களுக்குள் கடந்த 11 ஆம் திகதி அதனை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். போலி கணக்குகள் புளூ டிக் சேவையுடன் இருப்பது பற்றி அறிந்ததும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த சூழலில், புளூ டிக் கட்டண சேவை எதிர்வரும் 29 ஆம் திகதி மீண்டும் அமுலுக்கு வரும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »