Our Feeds


Thursday, November 24, 2022

News Editor

நாடு முழுவதும் பரவி வரும் மற்றுமொரு வைரஸ்!


 

இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோயொன்று, இந்நாட்களில் நாட்டின் பல பகுதிகளிலும் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுடன் ஒப்பிடுகையில், இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஒருவருக்கு இந்நோய் பரவும் அபாயம் உள்ளதால், முறையான சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியம் என வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »