Our Feeds


Saturday, November 5, 2022

ShortTalk

இளம் பெண் ஆசிரியையின் போலி நிர்வாணப் படங்களை பகிர்ந்த இளம் பிக்குவுக்கு சிறை.





(எம்.எப்.எம்.பஸீர்)


இளம் பெண் ஆசிரியையின் செம்மைப்படுத்தப்பட்ட நிர்வாண படங்களை வட்ஸ்அப்பில் பகிர்ந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பௌத்த பிக்கு ஒருவருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்  5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு மாத கடூழிய சிறைத்தண்டனை  விதித்தது. கொழும்பு பிரதான நீதிவான் நத்தன அமரசிங்க இதற்கான உத்தர்வை நேற்று (04) பிறப்பித்தார்.

கணினிக் குற்றங்கள் தொடர்பிலான சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், குறித்த தேரருக்கு  5,000 ரூபா அபராதம் செலுத்துமாறும் இந்த தீர்ப்பின் போது கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க  அறிவித்தார்.

30 வயதுடைய இளம் பெண் ஆசிரியை ஒருவர், கடந்த கொரோனா  தொற்றுநோய் பரவிய காலப்பகுதியில்,  சூம் தொழில்நுட்பத்தின் மூலம் மேலதிக ஆங்கில  வகுப்புகளை நடத்தி அந்தப் பகுதியில் உள்ள மாணவர்களிடையே பிரபலமடைந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில் "நான் இந்த படங்களை மற்ற மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா" என்று வினவியவாறு  குற்றம் சாட்டப்பட்ட பிக்கு வட்ஸ்அப் மூலம் செம்மைபப்டுத்தப்பட்ட போலி நிர்வாண படங்களைப் பகிர்ந்ததாக  குறித்த ஆசிரியயை சி.ஐ.டி.க்கு செய்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையிலேயே விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி. , எம்பிலிப்பிட்டியவில் உள்ள விகாரை ஒன்றில் கடமையாற்றும் 17 வயதுடைய பிக்கு சந்தேக நபரை, குற்றப் புலனாய்வு திணைக்களம் கண்டறிந்து கைது செய்தனர்.

இந்நிலையிலேயே குறித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட  பிக்குவுக்கு இந்த ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »