Our Feeds


Thursday, November 3, 2022

News Editor

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு




உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவஸ்தானத்தின் மீதான தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நட்டஈடு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 128 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி மஹேஷா டி சில்வா தீர்மானித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 15ஆம் திகதி குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாக அவர் அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வேளையில், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் காரணமாக சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் இவ்வாறு நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, சுமார் 200 போடி நட்டஈட்டுத் தொகையை வழங்க வேண்டுமென மனுதாரர்கள் ஊடாக கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »