Our Feeds


Thursday, November 3, 2022

News Editor

நவீன சொகுசு விமானத்தை வாங்கிய எலான் மஸ்க்


 


எலான் மஸ்க். தற்போது 646 கோடி இந்திய ரூபா மதிப்புள்ள சொகுசு விமானம் ஒன்றை வாங்கியுள்ளார்.

ஜி700 என்ற ஜெட் விமானத்தை வாங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 57 அடி நீளமுள்ள இந்த விமானம் நவீன வசதிகளை கொண்டது. 7500 கடல் மைல்கள் தொடர்ந்து பறக்கக்கூடியது.

ஜி700 விமானம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் எலான் மஸ்க்கிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விமானத்தை அமெரிக்க விமான உற்பத்தியாளரான கல்ப்ஸ்ட்ரிம் ஏரோஸ்பேஸ் கோர்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த விமானம் இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. விமானத்தில் வை-பை உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன.

எலான் மஸ்க் தனது பயணத் தூரங்களுக்கு ஜி650 இ.ஆர் என்ற தனியார் விமானத்தை பயன்படுத்தி வருகிறார். இந்த விமானத்துக்கு பதில் அடுத்த ஆண்டு முதல் புதிய விமானத்தை பயன்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »