Our Feeds


Thursday, November 3, 2022

News Editor

வெளிநாட்டில் தொழில் தேடும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை

 



வெளிநாட்டில் வேலைவாய்பை பெற்று தருவதாக கூறி சுமார் 300 இளைஞர் யுவதிகளிடம் பண மோசடி செய்த நபர் ஒருவர், தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மோசடியில் சிக்கிய சிலர் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த போலி வெளிநாட்டு முகவர் நிலையம் பத்தரமுல்ல-ரஜமல்வத்த என்ற இடத்தில் நடத்தப்பட்டுள்ளது.

மலேசியாவில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக தெரிவித்து அஜித்குமார விக்ரமசிங்க என்ற நபர், நாடு முழுவதிலும் சுமார் 180 இளைஞர் யுவதிகளிடம் தலா 1 இலட்சத்து 51,000 ரூபா வீதமும், ஏனையவர்களிடம் 6,000 ரூபா வீதமும் பணம் பெற்றுக் கொண்டுள்ளார்.

பணம் செலுத்தப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் வேலைவாய்ப்பு கிட்டவில்லை. இதனால் இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கு சென்று இவர்கள் கேட்டுள்ளனர். இதன் உரிமையாளர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து தம்மை ஏமாற்ற முயற்சித்ததாக அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தலங்கம பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தலங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »