Our Feeds


Thursday, November 3, 2022

ShortTalk

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை மீண்டும் சோதனை செய்தது வடகொரியா - அமெரிக்கா கடும் கண்டனம்.



வட கொரியா  கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை இன்று ஏவியதையடுத்து வடகொரியா மீது தடைகளை அமுல்படுத்துமாறு அனைத்து நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.


வடகொரியா நேற்று 23 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்திய நிலையில், இன்று வியாழக்கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உட்பட 3 ஏவுகணைகளை வட கொரியா ஏவியுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.  'ஜப்பானிய கடல்' பகுதியில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது,

வட கொரியாவின்  இன்றைய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை தோல்வியடைந்துள்ளதாக தென்படுதாக தென் கொரிய இராணுவம் கூறியுள்ளது.

எனினும், , வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கு ((Intercontinental ballistic missile- ICBM) அமெரிக்கா, தென் கொரியா முதலான நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேரவை பேச்சாளர் அட்ரியானா வட்சன் இது தொடர்பாக கூறுகையில், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் (வட கொரியா) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சேசாதனை நடத்தியதை ஐக்கிய அமெரிக்கா வலிமையாக கண்டிக்கிறது' என்றார். 

'எமது சகாக்கள் மற்றும் பங்களார்களுடன் இணைந்து, ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் தேசிய பாதுகாப்பு குழுவினர் நிலைமையை உன்னிப்பாக மதிப்பீடு செய்து வருகின்றனர்' எனவும் அவர் தெரிவித்துள்ளனர். 

வட கொரியாவின் இந்த ஏவுகணை வீச்சானது அதன் அயல்நாடுகள், பிராந்தியம், மற்றும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு மற்றும் பூகோள ஆயுத பரிகரணம் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாகும் எனவும் அவர் கூறியுள்ளார்,

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »