Our Feeds


Tuesday, November 1, 2022

ShortTalk

அடைமழை - விக்டோரியா நீர்த்தேகத்தின் தன்னியக்க வான்கதவுகள் திறந்து மூடிக்கொண்டன.



ஷேன் செனவிரத்ன


மலையகத்தில் நீரேந்தும் பிரதேசங்களில் பெய்துவரும் அடைமழை காரணமாக, விக்டோரியா நீர்த்தேகத்தின் தன்னியக்க வான்கதவுகள் இரண்டும் இன்று (01) அதிகாலை 4 மணியளவில் திறந்துகொண்டனர்.


சுமார் நான்கரை மணிநேரம் நீரை ​வெளியேற்றியதன் பின்னர், அவ்விரண்டு வான்கதவுகளும் மூடிக்கொண்டன.


722 மில்லியன் கன மீற்றர் கொள்ள​ளவைக் கொண்ட விக்டோரியா நீர்த்தேகத்தில், தன்னியக்கமாகக் திறந்துகொண்ட வான் கதவுகள் இரண்டின் ஊடாக வினாடிக்கு 160 கனமீற்றர் நீர், ரந்தெனிகல நீர்த்தேக்கத்துக்கு திறந்துவிடப்பட்டது என நீர்த்தேகத்துக்குப் பொறுப்பான பொறியியலாளர் வந்த எஹேலபிட்டிய தெரிவித்தார்.


இந்நிலையில், ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 80 சதவீதம் வரையிலும் அதிகரித்துள்ளது என மஹாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »