Our Feeds


Friday, November 4, 2022

News Editor

டிசம்பரில் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைப்பதற்கான வாய்ப்பில்லை- இலங்கையை கைவிட்டது சீனா - இந்துஸ்தான் டைம்ஸ்


 


இலங்கையுடன் சீனா கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்காததன் காரணமாக டிசம்பரில் இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைக்காது என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனா தனது கம்யுனிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரஸ் குறித்து கவனம் செலுத்துவதாலும் இலங்கையுடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்காததன் காரணமாகவும் டிசம்பரில் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைக்காது என்பதால் இலங்கை பாரிய அரசியல் நெருக்கடியை நோக்கி தள்ளப்படுகின்றது என இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இலங்கை டிசம்பர் காலக்கெடுவை தவறவிடும, சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் கடனை பெறுவதற்காக மார்ச் வரை காத்திருக்கவேண்டும் என அமெரிக்காவின் நிதி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை அந்நியசெலாவணி தேய்மானம் ஆழ்ந்த மந்தநிலை மற்றும் அதிகரித்து வரும் நிதிப்பற்றாக்குறை காரணமாக இலங்கையின் கடன் மேலும் அதிகரித்துள்ளது என இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கடன்வழங்கிய ஜப்பான் இந்தியா போன்ற நாடுகள் கடன் மறுசீரமைப்பு நல்லிணக்கம் குறித்த பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே இலங்கையுடன் ஆரம்பித்துள்ள போதிலும் சீனா இன்னமும் இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை.

சீனா கம்யுனிஸ்ட் கட்சியின் 20 வது மாநாடு குறித்து தொடர்ந்து கவனம் நீடிப்பதால் தன்னிடம் கடன் வாங்கிய இலங்கை குறித்து கவனம் செலுத்துவதற்கு சீனாவிற்கு நேரம் போதுமானதாகயில்லை என  இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மொத்த கடன் 2021 இல் 36 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது இதில் சீனாவிற்கு 7.1 பில்லியன் கடனை செலுத்தவேண்டும்,( 20 வீதம் ) என தெரிவித்துள்ள இந்திய ஊடகம் 2021 டிசம்பரில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 115.3 வீதமாக காணப்பட்ட மொத்த பொதுக்கடன் 2022 ஜூனில் இது 143.7 வீதமாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

இதில் இரு தரப்பு கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.7 வீதமாகயிருந்து 20.4 வீதமாக அதிகரித்துள்ளது.

தற்போது நடைமுறைகளிற்கான தருணம் நாங்கள் முன்னோக்கி செல்லவேண்டும் எங்களால் டிசம்பரிற்குள்  சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாட்டிற்கு வரமுடியும் என்றால்  இதன் அர்த்தம் என்னவென்றால் நவம்பரில் எங்களால் சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாட்டிற்கு வரமுடிந்தால் எங்களால் பெரும் சாதகநிலையை பெறமுடியும் எனஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார் என்பதையும் இந்திய ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மாநாட்டின் பின்னர் சீனாவின் கவனம் அது தொடர்பான விடயங்களில் காணப்படுவதால் எங்களால் டிசம்பர் ஆரம்பத்திற்குள் இதனை சாதிக்க முடியுமா என்பது தெரியவில்லை,ஆனால் நாங்கள் ஜனவரியை இலக்காக கொள்ளவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

மார்ச் மாதம் சர்வதேச நாணயநிதியத்தின் அடுத்த கூட்டம் இடம்பெறும்வரை தாக்குபிடிப்பதற்கு இலங்கை;கு 850 மில்லியன் டொலர் நிதி உதவி தேவை.

இல்லாவிட்டால் ஜூலை ஆகஸ்ட் மாதம் போல பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் காணப்படும் இலங்கையின் எதிர்கட்சிக்கு தானாக எழுந்து நிற்பதற்கான செல்வாக்கு இல்லை,என்பதால் தீவிர இடதுசாரிகள் அரசியலில் முக்கியத்துவம் பெறும் நிலை காணப்படும்.

இலங்கைக்கு அவசியமான 850 மில்லியன் டொலர் நிதிஉதவியை யார் வழங்கப்போகின்றார் என்பதே கேள்வி எனவும் இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளில் சீனா இன்னமும் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை,இந்தியா ஏற்கனவே கொழும்புடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது முன்கூட்டிய நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஜப்பானுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கை தனது வெளிநாட்டுக்கடன்களில் இந்தியாவிற்கு 1.7 பில்லியன் டொலர்களை இரு தரப்பு கடனாக செலுத்தவேண்டியுள்ளது இலங்கை முற்றாக வீழ்ந்துவிடாமலிருப்பதை உறுதி செய்வதற்காக மோடி அரசாங்கம் மேலும் நான்கு பில்லியன் டொலர் அவசர உதவியை வழங்கியுள்ளது.

இலங்கை இந்து சமுத்திரத்தில் போட்டியாளர்களான இந்தியா சீனாவை வைத்து காய்களை நகர்த்துகின்ற போதிலும் இந்தியா இந்த உதவியை வழங்கியுள்ளது.

இலங்கை சீனா தனது பூஜ்ஜிய கொவிட் கொள்கையை அகற்றி தனது நாட்டின் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கும் நாட்டிற்காக இலங்கை காத்திருக்கலாம்.

இலங்கையின் அரசியல் பொருளாதார எதிர்காலம் இருள்மயமானதாக காணப்படுகின்றது என இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »