Our Feeds


Friday, November 4, 2022

ShortTalk

ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்தாமல், ‘டிமிக்கி’ கொடுத்த பிக்குவுக்கு விளக்க மறியல்



கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 18 நாட்களாக தங்கியிருந்து, அதற்கான கட்டணத்தைச் செலுத்தாமல் நழுவிச் சென்ற பிக்கு ஒருவரை – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.


மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் பிக்கு, கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி குறித்த ஹோட்டலுக்குச் சென்று, குறைந்தது 18 நாட்கள் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்த நிலையில் பிக்குவுக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டதையடுத்து – கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் உடல்நிலை சரியானவுடன் அவர் தங்கியிருந்த ஹோட்டல் கட்டணமான 5 லட்சத்து 27 ஆயிரத்து 820 ரூபாவை செலுத்துவதாகவும் ஹோட்டலுக்கு தெரியப்படுத்தப்பட்டது.


ஆயினும், பிக்கு வைத்தியசாலையில் இருந்து வெளியேறி மஹியங்கனையிலுள்ள தனது விகாரைக்குச் சென்றபோது, ஹோட்டல் கட்டணத்தை செலுத்தத் தவறியதால், ஹோட்டல் நிர்வாகம் – குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்தது.


இதற்கிணங்க, பிக்குவை குற்றப் புலனாய்வு பிரிவினர் அவரின் விகாரையில் வைத்துக் கைது செய்தனர்.


இதனையடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பிக்குவை, நொவம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »