நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்களை மாத்திரம் அனுமதிக்கவில்லை என வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
வவுனியாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (நவ.19) இடம்பெற்ற நிகழ்வு தொடர்பிலான செய்தி சேகரிப்பிற்கு அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனினும், இடவசதி பற்றாக்குறை காரணமாக, குறித்த செய்தியை ஒளிபதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாது என அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அரச தொலைக்காட்சி சேவைகள் மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஒளிபதிவு கருவிகளுக்கு மாத்திரமே இந்த நிகழ்வை பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒளிபதிவு கருவிகள் இன்றி, செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு முழுமையான அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் உயர் அதிகாரி கூறுகின்றார்.
அதைவிடுத்து, செய்தி சேகரிப்பிற்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அதிகாரி, மேலும் தெரிவித்தார்.