Our Feeds


Sunday, December 25, 2022

ShortTalk

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு - 18 பேர் உயிரிழப்பு - 17 இலட்சம் பேர் மின்சாரமின்றி தவிப்பு




அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. வெடிகுண்டு சூறாவளி என்று அழைக்கப்படும் இந்த பனிப்புயல் பல மாகாணங்களை தாக்கி வருகிறது. இதனால் தொடர்ந்து பனி கொட்டியபடியே இருக்கிறது.


பனிப்புயலால் அமெரிக்காவில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் மலைபோல் பனி குவிந்து கிடக்கிறது. ரயில் பாதைகள், விமான ஓடுபாதைகளில் பனி கொட்டிக்கிடக்கிறது.

இதனால் விமான, ரயில்கள் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. பல இடங்களில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கள் ஏற்பட்டன. இதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பனிப்புயலுக்கு 18 பேர் உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரை தாங்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

மேலும் பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 17 இலட்சம் பேர் மின்சாரமின்றி இருளில் தவிக்கிறார்கள். கடும் பனிப்பொழிவால் வெளியில் செல்ல முடியாத சூழலில் வீட்டுக்குள் மின்சாரம் இல்லாமல் குளிரில் உறைந்து போய் கிடக்கிறார்கள்.

சாலைகள், மற்ற இடங்களில் கிடக்கும் பனிகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஆனாலும் இடைவிடாத பனிப்பொழிவு இருப்பதால் தொடர்ந்து பனி குவிந்துகொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் பனிப்பொழிவு காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களையிழந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »