Our Feeds


Wednesday, December 7, 2022

ShortNews

நீர்கொழும்பு, கொச்சிக்கடையில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்தவர் கைது



பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்து வந்ததாக கூறப்படும்  நபர் ஒருவர் நீர்கொழும்பு, கொச்சிக்கடை மகா வித்தியாலயம் அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


கொச்சிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து  கஞ்சா கலந்த 354 கிராம் பாபுல் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சந்தேக நபர் கொழும்பு வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சந்தேக நபர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொச்சிக்கடை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சிறிநிக்க ஜயகொடி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபரை நாளை மன்றில் ஆஜர் செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »