யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் இன்று புதன்கிழமை (07) காலை 5 மணியளவில் தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
கோகிலன் சாரோன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மரண விசாரணைகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
