Our Feeds


Wednesday, December 7, 2022

ShortNews

LPL 2022 : தம்புள்ளை ஓரா அணியை துவம்சம் செய்த ஜப்னா கிங்ஸ்!



லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் இன்று (07) இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி தம்புள்ள ஓரா அணியை 9 விக்கட்டுக்களினால் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.


போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள ஓரா அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக ஜோர்தான் கொக்ஸ் 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ஜப்னா அணியின் பந்துவீச்சில் மஹீஸ் தீக்ஷன மற்றும் வியாஸ்காந்த் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 122 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஜப்னா ஸ்டார்ஸ் அணி 15.4 ஓவர்களில் 1 விக்கட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

ஜப்னா அணி சார்பாக சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்ணான்டோ 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »