Our Feeds


Sunday, December 25, 2022

ShortTalk

துருக்கி ZERO WASTE மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாக அமைச்சர் நஸீர்.



துருக்கியில் ஆரம்பமாகியுள்ள "ஷீரோவேஸ்ட்" மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் கலந்து கொண்டுள்ளார்.


வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டுக்கு துருக்கியின் முதற்பெண்மணி எமினிஎடோர்கன் தலைமை தாங்குகிறார்.


இம்மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் நஸீர் அஹமட் குறிப்பிட்டதாவது, கால நிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் பிரதான பங்களிப்புக்கு  இளைஞர்களின் செயற்பாடுகளை அதிகரிப்பது அவசியம்.


சுற்றாடற் செயற்பாடுகளில் இளைஞர்களையும் உள்ளீர்ப்பதனூடாகவே, இத்துறையில் அவர்களின் பங்களிப்புக்களை உயர்த்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட் டார்.


காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் வீண்விரயங்களை பூச்சியமாக்கல் என்ற தொனிப் பொருளில் இம்மாநாடு துருக்கியில்  நடைபெறுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »