Our Feeds


Wednesday, January 25, 2023

ShortTalk

தமிழ்நாடு, மதுரையிலிருந்து 2 மணி நேரத்தில் சென்னை சென்ற இதயம்.



மூளைச்சாவு அடைந்த நபரின் இதயம் தானமாகப் பெறப்பட்டு இரண்டு மணி நேரத்துக்குள் மதுரையிலிருந்து சென்னை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு நோயாளி ஒருவருக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டது.



மதுரையைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார்.


அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.


இதையடுத்து அந்த இளைஞரின் உடல் உறுப்புகளை தானமளிக்க, அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவருக்கு, அவரிடமிருந்து தானமாகப் பெற்ற இதயத்தைப் பொருத்த திட்டமிடப்பட்டது.


அதன்படி, செவ்வாய்க்கிழமை மதுரையில் இருந்து விமானம் வாயிலாக 1.45 மணி நேரத்தில் சென்னை விமான நிலையத்துக்கு இதயம் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு 15 நிமிடத்தில் அந்த உறுப்பு கொண்டு வரப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.


மதுரையில் இருந்து சென்னை காவேரி மருத்துவமனைக்கு, இரண்டு மணி நேரத்தில் இதயம் கொண்டு வர உதவியாக இருந்த சென்னை பொலிஸ் மற்றும் மருத்துவர்களுக்கு, காவேரி மருத்துவமனை நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »