காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாஃப்டரின் உடல் பாகங்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து கிடைக்கப் பெற்ற தடயங்களை DNA பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இந்த அனுமதி வழங்கியுள்ளார்.
இதன்படி, இரத்த மாதிரிகள், நகங்கள், உடல் பாகங்கள் மற்றும் சில தடயங்கள் தொடர்பான DNA பரிசோதனையை அரசாங்க பகுப்பாய்வாளர் ஊடாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பெற்றுக்கொள்ள கொழும்பு மேலதிக நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
