மாநகரம் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் அண்மித்த சூழ்நிலையில் பேரம் பேசுதல்களும் சூடுபிடித்துள்ளன. கொழும்பில் கடந்த மாநகர சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி இந்த முறை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியூடாக போட்டியிட முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனோ கணேசனின் ஜனநாயக கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான வேலுக்குமார் அவர்களும் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் உள்ளாட்சி மன்றத் தேர்தல் ஜனநாய மக்கள் முன்னனிக்கு ஒரு சவாலாக அமையக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
அதே வேலை மனோ கணேசனின் தம்பியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் அவர்கள் தனியாக கட்சி ஆரம்பித்து தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.
இப்படியான நிலையில் மனோவின் ஜனநாயக மக்கள் முன்னனி தனித்து களம் காண்பது பெரும் சவாலாக அமையக் கூடும் என்பதால் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க மனோ முயற்சிப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அண்மையில் SHORTNEWS இன் SHORT TALK அரசியல் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்கள் தாம் உள்ளாட்சித் தேர்தலுக்கு எந்நேரமும் தயார் எனவும் ஆனால், தனித்துப் போட்டியிடுவதா? அல்லது ஐக்கிய மக்கள் சக்தியுடன் சேர்ந்து போட்டியிடுவதா என்பதை இது வரை முடிவு செய்யவில்லை என்பதாகவும் தெரிவித்திருந்தார்.
