Our Feeds


Thursday, February 16, 2023

ShortTalk

முதல் 30 மின் அலகுகளுக்காக அறவிடப்பட்ட 8 ரூபா இனிமேல் 30 ரூபாவாக அதிரிக்கப்பட்டுள்ளது. - புதிய மின் கடடண விபரம்



(இராஜதுரை ஹஷான்)


24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்கவும், மின்னுற்பத்திக்கான செலவுகளை முகாமைத்துவம் செய்யவும் இலங்கை மின்சார சபை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்கட்டணத்தை  66 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

நிறைவடைந்த 5 மாத காலப்பகுதிக்குள் இரு தடவைகள் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளன.

0-30 மின்னலகுக்கான கட்டணம் 753 ரூபாவாகவும்,31-60 அலகுக்கான புதிய கட்டணம் 2,278 ரூபாவாகவும், 90 மின்னலகுக்கான கட்டணம் 3,675 ரூபாவாகவும்,91-120 வரையான மின்னலகுகளுக்கான கட்டணம் 6,238 ரூபாவாகவும்,120-180 வரையான மின்னலகுகளுக்கான கட்டணம் 8,340 ரூபாவாகவும்,180 மின்னலகுகளுக்கான கட்டணம் 18,300 ரூபாவாக உயர்வடையும் என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

புதிய கட்டண திருத்தத்திற்கு அமைய முதல் 30 மின் அலகுகளுக்காக நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) வரை அறவிடப்பட்ட 8 ரூபா தற்போது 30 ரூபாவாக அதிரிக்கப்பட்டுள்ளது.

31 முதல் 60 முதலான மின்னலகுகளுக்கான அறவிடப்பட்ட 10 ரூபா தற்போது 31 ரூபாவாகவும், 61-90 வரையான மின்னலகுக்காக அறவிடப்பட்ட 16 ரூபா தற்போது 42 ரூபாவாக அதிகரிக்கபபட்டுள்ளன.

 91-120 மின்னலகு மற்றும் 121- 180  மற்றும் 181 இற்கு அதிகமான மின்னலகுக்காக அறவிடப்பட்ட 50 ரூபா தற்போது 75 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய ஆரம்ப 30 மின்னலகுக்கான நிலையான கட்டணம் 400 ரூபாவாகவும், மின்னலகு 31 தொடக்கம் 60 வரையான மின்னலகுக்கான நிலையான கட்டணம் 550 ரூபாவாகவும்,மின்னலகு 61 தொடக்கம் 90 வரையான மின்னலகுக்கான நிலையான கட்டணம் 650 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மின்னலகு 91 தொடக்கம் 120 வரையான மின்னலகுக்கான நிலையான கட்டணம், மின்னலகு 121 தொடக்கம் 180 மின்னலகுக்கான நிலையான கட்டணம 1500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

மத தலங்கள் மற்றும் ஏனைய வழிபாட்டு இடங்களின் மின்கட்டணங்களில் 30 மின்னலகுகளுக்காக அறிவிடப்பட்ட 8 ரூபா இனி 30 ரூபாவாகவும்,31-90 வரையான மின்னலகுகளுக்காக அறவிடப்பட்ட 15 ரூபா இனி 37 ரூபாவாகவும்,180 இற்கு அதிகமான மின்னலகுகளுக்கான அறவிடப்பட்ட 32 ரூபா இனி 50 ரூபாவாகவும் அறவிடப்படும்.

மத தலங்களிடமிருந்து 30 அலகுகளுக்காக அறவிடப்பட்ட 90 ரூபா நிலையான கட்டணம் 400 ரூபாவாகவும்,31-90 வரையான மின்னலகுகளுக்காக அறவிடப்பட்ட 120 ரூபா நிலையான கட்டணம் 550 ரூபாவாகவும்,180 இற்கும் அதிகமான மின்னலகுக்காக அறவிடப்பட்ட 1,500 ரூபா நிலையான கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

கைத்தொழில்சாலைகளில் ஆரம்ப 30 மின்னலகுகளுக்காக அறவிடப்பட்ட 20 ரூபா இனி 26 ரூபாவாக அறவிடப்படும் அத்துடன் 30 மின்னலகுகளுக்காக அறவிடப்பட்ட 960 ரூபா நிலையான கட்டணம் 1,200 ரூபாவாகவும்,30 இற்கும் அதிகமான மின்னலகுகளுக்காக அறவிடப்பட்ட 1,500 ரூபா நிலையான கட்டணம் 1,600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பொது சேவைகள்,ஹோட்டல்,மற்றும் அரச நிறுவனங்களின் முதல் 180 மின்னலகுகளுக்காக அறவிடப்பட்ட 360 ரூபா நிலையான கட்டணம் 1,000 ரூபாவாகவும்,180 மின்னலகுகளுக்கு அதிகமான மின்னலகுகளுக்காக அறவிடப்பட்ட 1,500 ரூபா நிலையான கட்டணம் 1,600 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »