Our Feeds


Tuesday, February 28, 2023

Anonymous

யாழ்.மாநகர சபை பஜ்ஜட் மீண்டும் தோல்வி; சபை கலைந்தது?

 



எம்.றொசாந்த், வி.நிதர்ஷன்


யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ம் ஆண்டுக்ககான வரவு - செலவுத்திட்டம், இன்றைய தினம் (28) சபையில் முன் மொழியப்பட்டதை அடுத்து, 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 


யாழ். மாநகர சபையின் வரவு - செலவு திட்டம், மேயர் ஆர்னோல்ட் தலைமையில் இன்று முன்மொழியப்பட்டது. 

சபையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, வரவு - செலவு திட்டத்துக்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன், ஒருவர் நடுநிலைமை வகித்திருந்தார். 

அதனால் மாநகர சபையின் செயற்பாடுகள் இன்றைய தினத்துடன் நிறைவுக்கு வந்தது. 

மேயர் ஆர்னோல்டினால், 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் கடந்த 13ஆம் திகதி முன் மொழியப்பட்ட போது, அதுவும் தோற்கடிக்கப்பட்டது. (N)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »